புதுச்சேரி

தமிழகத்தை போல் புதுவை சட்டப்பேரவை நிகழ்வுகளையும் நேரலை செய்ய வேண்டும்: எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கோரிக்கை

புதுச்சேரி:
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரலையாக ஒளிபரப்பப்படுவதை போல, புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகள் பேசும் கருத்துக்கள், விவாதங்கள் மற்றும் அரசு அறிவிக்கும் திட்டங்கள் ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களை சென்றடையும் வகையில் தமிழகத்தில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக வழங்கப்பட்டு வருகின்றன. அதே நடைமுறையை புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் செயல்படுத்த வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர், தற்போதைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான பிக்பாஸ் போன்றவற்றை விட, மக்கள் நலன் சார்ந்த சட்டப்பேரவை விவாதங்களையே பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் கவனித்து பார்க்கின்றனர் என்று குறிப்பிட்டார். எனவே, புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகளையும் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் முழுமையாக நேரலை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன