புதுச்சேரி

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை சோதனை செய்வதால் புதுவை சுற்றுலா பாதிக்கப்படும்: அரசு கொறடா ஏகேடி.ஆறுமுகம் அதிரடி!

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை தேவையற்ற முறையில் சோதனையிடுவதை விடுத்து, நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசு கொறடா ஏகேடி.ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி ஒரு முக்கிய சுற்றுலா தலமாக விளங்குவதால், வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகை தருகின்றனர். இந்நிலையில், எல்லைப் பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்தி காவல்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து அரசு கொறடா ஏகேடி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள கருத்தில், “புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதை விட்டுவிட்டு, சுற்றுலாவுக்கு வருபவர்களின் வாகனங்களை போலீசார் சோதனை செய்வது முற்றிலும் தேவையற்ற ஒன்றாகும். இத்தகைய நடவடிக்கைகளால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதுடன், புதுவையின் சுற்றுலாத்துறையும் கடுமையாக பாதிக்கப்படும்,” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன