புதுச்சேரி

புதுச்சேரி புத்தகத் திருவிழா ஆக. 27-ல் தொடக்கம்: தோழர் ஆயிஷா நடராசன் கருத்துரை!

புதுச்சேரி: பாரதி புத்தகாலயம் சார்பில் புதுச்சேரி புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்டு 27-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 7-ஆம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. புத்தக வாசிப்பை மக்களிடையே பரவலாக்கும் நோக்கில் இந்த புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலாசுப்பேட்டையில் அமைந்துள்ள விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மைய வளாகத்தில் இத்திருவிழா நடைபெறவுள்ளது. புத்தகத் திருவிழாவின் தொடக்க விழாவில் பிரபல எழுத்தாளரும் கல்வியாளருமான தோழர் ஆயிஷா நடராசன் கலந்துகொண்டு சிறப்பு கருத்துரை வழங்குகிறார்.

இந்த புத்தகத் திருவிழாவில் பல்வேறு முன்னணி பதிப்பகங்களின் சிறந்த படைப்புகள், சமூகம், அரசியல், அறிவியல், இலக்கியம் மற்றும் குழந்தைகளுக்கான கதை நூல்கள் இடம்பெறுகின்றன. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த அறிவுத் திருவிழாவில் திரளாகப் பங்கேற்று பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன