புதுச்சேரி

உப்பனாறு பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் உத்தரவு: எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் கோரிக்கைக்கு வெற்றி!

புதுச்சேரி: புதுச்சேரி உப்பனாறு பாலம் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்தி விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின், உப்பனாறு பாலம் பணிகளைத் தாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசுக்குத் தீவிரக் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், பாலம் கட்டப்பட்டு வரும் களப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது பாலம் பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், பொதுமக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பணிகளைத் தரமாகவும் விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எம்.எல்.ஏ-வின் தொடர் முயற்சியால் பணிகள் வேகம் எடுத்துள்ளது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன