தட்டாஞ்சாவடியில் மழைநீர் தேங்காமல் சாலை சீரமைப்பு: அசோக் ஆனந்தன் முன்னெடுப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி

புதுச்சேரி, ஆக. 25: தட்டாஞ்சாவடி பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் ஶ்ரீ குண்டு தாங்கிய அய்யனாரப்பன் ஆலயம் அருகே மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண அப்பகுதி மக்கள் மக்கள் சேவகர் அசோக் ஆனந்தனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை உடனடி கவனத்தில் கொண்ட அசோக் ஆனந்தன், இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களிடம் எடுத்துரைத்தார். முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில், அப்பகுதியில் உடனடியாக களமிறங்கிய அதிகாரிகள், பள்ளம் விழுந்த சாலைப் பகுதிகளில் மணல் கொட்டி சீரமைக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர்.
தற்போது சாலை சீரமைக்கப்பட்டுள்ளதால் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்பாக சென்று வருகின்றனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் ஏற்று, விரைந்து நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் மக்கள் சேவகர் அசோக் ஆனந்தன் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
