புதுச்சேரி

புதுச்சேரி இந்திரா நகர் பகுதியில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை: எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

புதுச்சேரி, ஆக. 21: புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட முத்திரைப்பாளையம் பகுதியில், கல்கி கோயில் எதிரில் உள்ள ஓம் சக்தி வீதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இப்பணிகள் மொத்தம் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.வி. ஆறுமுகம் (எ) ஏ.கே.டி அவர்கள் கலந்துகொண்டு, சாலை அமைக்கும் பணியினை முறைப்படி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்தப் பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த சாலை அமைக்கும் நிகழ்வில் உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களாக இப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன