புதுச்சேரி
இந்தியா மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற புதுச்சேரி மாணவர்: துணை நிலை ஆளுநர் பாராட்டு

புதுச்சேரி, தனது 15-வது வயதிலேயே ‘த கிரவுண்டு மைண்ட்’ (The Crowned Mind) என்ற புத்தகத்தை எழுதி, இந்தியா மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் (India and Asia Book of Records) இடம் பிடித்துள்ள திவ்யேஷ் எஸ். என்ற மாணவரை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கே. கைலாசநாதன் நேரில் சந்தித்து பாராட்டினார்.
இந்த சந்திப்பின்போது, மாணவர் திவ்யேஷின் விடாமுயற்சியையும், இவ்வளவு இளம் வயதில் அவர் கொண்டுள்ள ஆழ்ந்த தத்துவ சிந்தனைகளையும் ஆளுநர் வெகுவாகப் பாராட்டினார். புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ள இந்த இளம் எழுத்தாளரின் எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஆளுநர் தனது பாராட்டுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
