புதுச்சேரி

செவாலியே செல்லான் நாயக்கர் நினைவு நாள்: அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

புதுச்சேரி, ஆகஸ்ட் 11: புதுச்சேரி இணைப்புக் குழுவின் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான செவாலியே செல்லான் நாயக்கரின் நினைவு நாளை முன்னிட்டு, கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டிட வளாகத்தில் அவரது திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் புதுச்சேரி அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

செவாலியே செல்லான் நாயக்கர் புதுச்சேரியின் இந்திய ஒன்றிணைப்புப் போராட்டத்திலும் வளர்ச்சியிலும் பெரிதும் பாடுபட்டவர். அவரது நினைவு நாளில் அரசுத் தலைவர்கள் மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன