தமிழ்நாடு

அரியந்தாங்கல் விஷ்ணு துர்காம்பிகைக்கு 108 சங்காபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் அரியந்தாங்கல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு விஷ்ணு துர்காம்பிகைக்கு ஆடி மாதம் 24ஆம் தேதியை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஆலய அர்ச்சகர்கள் பரணி ஐயர் மற்றும் ஆதித்யா ஐயர் தலைமையில் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. தவத்திரு திருஞான மணிபால துர்கை சித்தர் அருள் வழியில் அறக்கட்டளை நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் சென்னை, பாண்டிச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

In brief (English)

A 108 Sangabishegam ritual was conducted at the Sri Vishnu Durgambigai temple in Ariyanthangal near Marakkanam, attended by devotees from nearby regions.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன