தமிழ்நாடு

டாஸ்மாக் ஆன்லைன் விற்பனை: இரு நாட்களில் ரூ.20 லட்சம் வருவாய்

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வாங்கும் முறை கடந்த 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய சேவைக்கு மதுப்பிரியர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் விற்பனை தொடங்கப்பட்ட முதல் நாளில் ரூ.11.62 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின. இரண்டாவது நாளில் சுமார் 3,000 முன்பதிவுகள் செய்யப்பட்டு, ரூ.9 லட்சம் மதிப்பிலான விற்பனை நடைபெற்றது.

இதன்மூலம், இரு நாட்களில் மட்டும் ஆன்லைன் வழி மதுபான விற்பனை சுமார் ரூ.20 லட்சத்தை எட்டியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன