புதுச்சேரி

புதுச்சேரியில் குப்பை அகற்றம்: வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்

புதுச்சேரியில் குப்பை தேங்கிக் கிடப்பது, குப்பை வாகனம் வராதது போன்ற பிரச்சினைகள் இருந்தால், பொதுமக்கள் 99440 33399 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என உள்ளாட்சித் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

புகார் அளிக்கும்போது, குப்பை தேங்கியுள்ள இடத்தின் புகைப்படம், முழுமையான முகவரி மற்றும் தொடர்பு எண்ணை அனுப்ப வேண்டும். பெறப்படும் புகார்களின் மீது 3 முதல் 6 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்கப் பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, குப்பைகளைத் திறந்தவெளியில் கொட்டாமல் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன