புதுச்சேரி

உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கும் நமச்சிவாயத்திற்குக் கல்யாணசுந்தரம் வாழ்த்து

புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கும் அமைச்சர் ஆ. நமச்சிவாயத்தை, முன்னாள் காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.எல். கல்யாணசுந்தரம் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

அப்போது நமச்சிவாயத்திற்குப் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்திய கல்யாணசுந்தரம், புதிய பொறுப்பில் மக்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு மற்றும் மாநில வளர்ச்சிக்காகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என வாழ்த்தினார்.

இந்தச் சந்திப்பின்போது இருவரும் புதுச்சேரியின் அரசியல் சூழல் மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்தும் கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன