தமிழ்நாடு
உயிர்ம வேளாண்மைக்கு ஏக்கருக்கு ₹4,000 ஊக்கத்தொகை: கட்டண விலக்கும் அறிவிப்பு
மாநிலத்தில் உயிர்ம வேளாண்மையை பரவலாக்கும் நோக்கில் 20,000 ஏக்கரில் உயிர்ம வேளாண் முறைகளைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ₹8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிரந்தர மண்புழு உரக்கூடங்கள் அமைக்க ₹10 கோடியும், தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில் பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டண விலக்கும் வழங்கப்படுகிறது. உயிர்ம விளைபொருட்களில் நச்சுப் பரிசோதனை செய்வதற்கான கட்டணத்திற்கு முழு மானியம் வழங்க ₹25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
In brief (English)
The Tamil Nadu government announced a special incentive of Rs 4,000 per acre for farmers adopting organic agriculture on 20,000 acres, alongside fee waivers for organic certification and testing subsidies.