தமிழ்நாடு
பருப்பு மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தன்னிறைவு: ₹203.64 கோடியில் புதிய இயக்கம்
தமிழ்நாட்டில் பயிர் வகைகள் மற்றும் எண்ணெய் வித்து சாகுபடியை அதிகரித்து, அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் நோக்கில் ₹203.64 கோடி செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி பயிர் வகை சாகுபடி பரப்பு 24.70 லட்சம் ஏக்கராகவும், எண்ணெய் வித்து சாகுபடி பரப்பு 14.89 லட்சம் ஏக்கராகவும் உயர்த்தப்படும். உளுந்து, துவரை, பச்சை பயிறு, நிலக்கடலை, எள் மற்றும் சூரியகாந்தி பயிர்களின் உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
In brief (English)
Tamil Nadu launched a Rs 203.64 crore mission to make the state self-sufficient in pulses and edible oilseeds production within five years.



