புதுச்சேரி
காரைக்கால் திருப்பட்டினத்தில் ₹10 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி தொடக்கம்
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட வடக்கட்டளை கிராமத்தில் உள்ள ஐந்து மரத்துக் குளத்தை ₹10 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை 125 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ மீனாட்சி சுந்தரம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 2,642 மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட உள்ளன. பயனாளிகளுக்கு 125 நாட்களும் முழுமையாக வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தகுதியான அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ உறுதியளித்தார்.
In brief (English)
MLA Meenakshi Sundaram launched a ₹10 lakh pond desilting initiative under MGNREGA in Thirupattinam, Karaikal, generating over 2,600 workdays.
