தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 54-வது கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபடி தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தண்ணீர் திறக்க வலியுறுத்திய போதிலும், தற்போதைய நிலையில் நீர் திறக்க இயலாது என கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
In brief (English)
The Cauvery Water Management Authority has directed Karnataka to release 3,500 cusecs of water daily to Tamil Nadu for 15 days. Karnataka has expressed its inability to release water and called for an all-party meeting.