புதுச்சேரி

கணவரை ஜாமீனில் எடுக்க கஞ்சா விற்ற ரவுடியின் மனைவி கைது: வெள்ளியனூரில் சம்பவம்

புதுச்சேரி வெள்ளியனூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி பிரகாஷ்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டதால், அவரது மனைவி ஷாலினி கணவரின் கூட்டாளிகள் மூலம் கஞ்சா வாங்கி எடை எந்திரம் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து ரகசியத் தகவல் அறிந்த வெள்ளியனூர் போலீசார் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த 290 கிராம் கஞ்சா மற்றும் எடை எந்திரத்தை பறிமுதல் செய்து ஷாலினியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

In brief (English)

Police in Vellianur arrested a woman who was selling ganja from her house to raise money for her jailed husband’s bail.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *