சினிமா

பாரம்பரிய பட்டுச் சேலையில் பேரழகு: ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறிய VJ பாவனா!

சென்னை:

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் வர்ணனையாளருமான விஜே பாவனா, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாரம்பரிய உடையில் இருக்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில், இளஞ்சிவப்பு பார்டர் கொண்ட மெல்லிய நிறப் பட்டுச்சேலை மற்றும் நேர்த்தியான பாரம்பரிய தங்க நகைகள், மல்லிகைப் பூ சூடி பேரழகோடு காட்சியளிக்கிறார். இந்தப் புகைப்படங்களுடன், ‘விநாயகர் பெருமான் நம் வாழ்வில் உடலிலும் மனதிலும் இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்கி அருளட்டும். இன்றைய நாள் நேர்மறையான மற்றும் அமைதியான தொடக்கமாக அமையட்டும்’ என்று நெகிழ்ச்சியான பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும், பண்டிகை நாளில் எத்தனை கொழுக்கட்டைகளை ருசித்தீர்கள் என்ற ஜாலியான கேள்வியையும் ரசிகர்களிடம் அவர் கேட்டுள்ளார். பண்டிகை கொண்டாட்டத்தின் உன்னதத்தை வெளிப்படுத்தும் விஜே பாவனாவின் இந்த பாரம்பரிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன