புதுச்சேரி

வீராம்பட்டினம் தேர் திருவிழா: ஆகஸ்ட் 14-ல் 3000 பக்தர்களுக்கு வள்ளலார் அன்னதானம்!

புதுச்சேரி, ஆகஸ்ட் 12: புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே உள்ள வீராம்பட்டினம் கிராமத்தில் நடைபெற்று வரும் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, வள்ளலார் அன்னதான அறக்கட்டளை சார்பில் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) சுமார் 3000 பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலின் ஆண்டுத் தேர் திருவிழா ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஐந்தாவது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இந்தத் திருவிழாவை முன்னிட்டு, வள்ளலார் அன்னதான அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு சத்தான உணவு வழங்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 14-ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. சுமார் 3000 பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெறவுள்ளனர்.

வீராம்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் கோயிலின் பிரமாண்ட தேர் திருவிழா ஆகஸ்ட் 14 அன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. தேரோட்டம் காலை 8 மணிக்கு தொடங்கியது; துணைநிலை ஆளுநர் குன்னில் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் என். ரங்கசாமி ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அலங்கரிக்கப்பட்ட தேரில் செங்கழுநீர் அம்மன் எழுந்தருள, வீராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோஷங்கள் முழங்கியபடி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கோயில் மற்றும் தேரோடும் வீதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இரவு அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 15-ம் தேதி தெப்ப உற்சவமும், 21-ம் தேதி முத்துப்பல்லக்கு உற்சவமும் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன