தமிழ்நாடு

தமிழக பெட்ரோல் பங்குகளில் UPI, Google Pay உள்ளிட்ட டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை நிறுத்த பெட்ரோலிய வணிகர் சங்கம் முடிவு

சென்னை, ஆகஸ்ட் 11: தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் UPI, Google Pay, PhonePe போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை நிறுத்த தமிழக பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் (TNPDA) முடிவு செய்துள்ளது. சைபர் குற்றப் பிரிவு போலீசாரின் நடவடிக்கைகளால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதும், அவர்கள் கைது செய்யப்படுவதும் இந்த முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக போலீசார் நடத்திய சைபர் குற்றத் தடுப்பு நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோருடன் சில பெட்ரோல் பங்க் டீலர்களும் கைது செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த டீலர்கள் சங்கம், தங்கள் உறுப்பினர்கள் எந்தவித தவறும் செய்யாமலேயே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

TNPDA தலைவர் கே.பி. முரளி பேசுகையில், பெட்ரோல் பங்குகளில் நாள் ஒன்றுக்கு 200 முதல் 500 வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. வாடிக்கையாளர் யார், அவரது பணத்தின் மூலம் என்ன என்பதைச் சரிபார்க்க எங்களுக்கு வழியில்லை. ஆனால் போலீசார் எங்கள் கணக்குகளை முடக்குவதும், எங்களைக் கைது செய்வதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன