தமிழ்நாடு
100 இடங்களில் தோட்டக்கலை விற்பனை நிலையங்கள்: ₹5 கோடியில் TANHODA திட்டம்
அரசு தோட்டக்கலை பண்ணைகள் மற்றும் பூங்காக்களில் உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரம், செடிகள், காய்கறிகள் மற்றும் இயற்கை இடுபொருட்களை நியாயமான விலையில் வழங்க 100 தோட்டக்கலை விற்பனை நிலையங்கள் ₹5 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன. மேலும் நகர்ப்புறங்களை எழிலூட்ட தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை (TANHODA) மூலம் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் குறைந்த செலவில் வீட்டுத் தோட்டம், புல்தரைகள் அமைக்க எளிதாக பதிவு செய்ய முடியும்.
In brief (English)
Tamil Nadu will establish 100 horticulture retail outlets with a ₹5 crore budget and introduce a dedicated web portal for urban greening and gardening services.