புதுச்சேரி
புதுச்சேரி குருசுக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம்: முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்
புதுச்சேரி, ஆக. 17: புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டிடத்தை புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி இன்று திறந்து வைத்தார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், புதிய கட்டிடத்தின் கல்வெட்டை அவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து, புதிய பள்ளிக் கட்டிடத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை அமைச்சரும், அதிகாரிகளும் பார்வையிட்டனர். இந்த நிகழ்வில் முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஸ்ரீ வையாபுரி மணிகண்டன் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.



