தேசியம்

“உங்கள் வேலையை பாருங்கள்” – டி.கே. சிவகுமார்

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் எழுப்பிய கேள்விகளுக்கு, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பதிலளித்துள்ளார்.

கர்நாடகத்தின் சாமராஜநகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் என்கவுன்ட்டரில் அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்த டி.கே. சிவகுமார், சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வனத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“ஒவ்வொருவரும் தங்களது வேலையைப் பார்க்கட்டும்” என்ற வகையில் அவர் கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன