புதுச்சேரியில் தொழிற்பூங்கா அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்: எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரியில் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் உள்ளூர் இளைஞர்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் நிலையை மாற்றி, இங்கேயே தொழில்துறை பூங்காவை (Industrial Park) அரசு விரைந்து அமைக்க வேண்டும் என்று காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி முடிக்கும் இளைஞர்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனால் வாழ்வாதாரத்திற்காகவும், தகுந்த பணிக்காகவும் அவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குத் தொடர்ந்து இடம்பெயர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.
எனவே, புதுச்சேரி அரசு இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, புதிய முதலீடுகளை ஈர்த்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய பிரம்மாண்ட தொழில்துறை பூங்காவை (Industrial Park) உடனே நிறுவ ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
