புதுச்சேரி

இளம் கண்டுபிடிப்பாளர் சாத்விக்: ‘டம் சமையல் முறை’க்கான புதிய கருவிக்கு காப்புரிமை!

புதுச்சேரி, ஆகஸ்ட் 12: புதுச்சேரியைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் சாத்விக் கார்த்திகேயன் (17) கண்டுபிடித்த Contemporary Device for Dum Cooking Method (டம் சமையல் முறைக்கான நவீன கருவி) என்ற கருவிக்கு அதிகாரப்பூர்வமாக காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனை குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளம் சாத்விக்கின் அறிவியல் மனப்பான்மையையும், அவர் உருவாக்கிய ‘டம் சமையல் முறைக்கான நவீன கருவி’யையும் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற புதுமையான சிந்தனைதான் நமது ‘யுவா பாரத்’ இயக்கத்தின் உயிர்நாடியாகும். மாண்புமிகு பிரதமரின் ‘விக்சித் பாரத்’ கனவை நனவாக்க இது அவசியம் என்று கூறியுள்ளார்.

மேலும், இளைஞர்கள் அனைவரும் சாத்விக்கின் சாதனையிலிருந்து ஊக்கம் பெற்று, உலக அரங்கில் இந்தியாவைத் தலைவராக நிலைநாட்டும் வகையில் புதுமையான தீர்வுகளுடன் முன்வர வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

சாத்விக் கார்த்திகேயன் 17 வயதில் புதுச்சேரியில் மிக இளம் பயன்பாட்டுக் காப்புரிமை (Utility Patent) பெற்றவராக அறியப்படுகிறார். மே 22, 2026 அன்று அவர் காப்புரிமை பெற்றார். Contemporary Device for Dum Cooking Method (டம் சமையல் கருவி) மற்றும் Mobile Support Dolly for Two-Wheeler Maintenance and Workshop Transport (இருசக்கர வாகன பராமரிப்புக் கருவி) ஆகிய இரண்டு கருவிகளுக்கும் அவர் காப்புரிமை பெற்றுள்ளார்.

இந்தக் கண்டுபிடிப்பு, பாரம்பரிய இந்திய ‘டம்’ சமையல் முறையை நவீனப்படுத்தி, உணவின் சுவையைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் புதுமையான சிந்தனைகளையும், கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும் வகையில், புதுச்சேரி அரசு ‘மை பாரத்’ (Mera Yuva Bharat) போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன