புதுச்சேரி தட்டான்சாவடி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் தொடக்கம்!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டான்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் தேர்தல் பிரச்சார பணிகள் இன்று முறைப்படி தீவிரமாக தொடங்கப்பட்டன.
தட்டான்சாவடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேது செல்வம் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார தொடக்க நிகழ்வில், புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சிவா மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர். தொகுதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து, தொகுதி மேம்பாடு மற்றும் மக்கள் நலப் பணிகளை முன்வைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.