புதுச்சேரி

மூலக்குளம் முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா: எம்.எல்.ஏ டாக்டர் நாராயணசாமி சுவாமி தரிசனம்!

புதுச்சேரி:

புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசாமி நேரில் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்து சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டார்.

விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. தொடர்ந்து கோவிலுக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விழாவில் திரளான பக்தர்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ டாக்டர் கே. நாராயணசாமி பக்தர்களுக்குக் கூழ் பிரசாதம் வழங்கி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன