புதுச்சேரி

புதுச்சேரி லெனின் வீதியில் பரபரப்பு: 50 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் பால்கனி சுவர் திடீரென இடிந்து விழுந்தது!

புதுச்சேரி: புதுச்சேரி லெனின் வீதியில் அமைந்துள்ள சுமார் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் பால்கனி சுவர் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த லெனின் வீதியில் உள்ள இக்கட்டிடத்தின் பால்கனி பகுதி நீண்ட காலமாகப் பழுதடைந்த நிலையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக பால்கனியின் முன்பக்க சுவர் பெயர்ந்து நடைபாதையில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. விபத்து நேரிட்ட தருணத்தில் கட்டிடத்தின் கீழே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாகப் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளைப் பார்வையிட்டு உடனடியாக போக்குவரத்தைச் சீர்செய்தனர். புதுச்சேரி நகரப் பகுதிகளில் உள்ள மிகப்பழமையான மற்றும் ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடங்களைக் கணக்கெடுத்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதமாக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன