புதுச்சேரி

புதுச்சேரி லாஸ்பேட்டை குளுனி பள்ளியில் Pre-KG, ஒன்றாம் வகுப்பு மாணவியர் சேர்க்கை: ஆன்லைன் விண்ணப்ப அறிவிப்பு வெளியீடு!

புதுச்சேரி, செப். 16:
புதுச்சேரி லாஸ்பேட்டையில் அமைந்துள்ள பிரபல தனியார் சிறுபான்மையினர் கல்வி நிறுவனமான தூய வளனார் குளுனி பள்ளியில் (St. Joseph of Cluny School), 2027-2028-ஆம் கல்வியாண்டிற்கான Pre-KG மற்றும் ஒன்றாம் வகுப்பு (Standard – I) மாணவியர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் மாணவியருக்கு மட்டுமே (Girls only) சேர்க்கை வழங்கப்படும் என்றும், விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர்கள் www.sjclunyicsepondy.org என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ‘Admission’ பகுதியை தேர்வு செய்து வரும் நவம்பர் 1, 2026 முதல் நவம்பர் 15, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு தகுதிகளைப் பொறுத்தவரை, Pre-KG வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் சிறுமிகள் 01.08.2023 முதல் 31.07.2024-க்குள் (3 வயது) பிறந்திருக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவிகள் 01.08.2020 முதல் 31.07.2021-க்குள் (6 வயது) பிறந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (500 KB), ஆதார் அட்டை நகல் (500 KB), பிறப்புச் சான்றிதழ் (1000 KB) ஆகியவை இணைக்கப்பட வேண்டும். கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருப்பின் ஞானஸ்நான சான்றிதழும், பிற கிறிஸ்தவ பிரிவினர் தங்களது தேவாலயத்தின் கடிதத்தையும் (1000 KB) பதிவேற்ற வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட முறை விண்ணப்பித்தாலோ அல்லது முறையான ஆவணங்களை இணைக்க தவறினாலோ விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்ப நிலை குறித்த தகவல்கள் பெற்றோரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்பதால், பள்ளி அலுவலகத்தை நேரடியாக அணுக வேண்டாம் என்று பள்ளி தலைமை ஆசிரியை தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன