புதுச்சேரி

சி.ஜி.எல். தேர்வு: புதுச்சேரியில் 69 பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (சி.ஜி.எல்.) போட்டித் தேர்வை முன்னிட்டு, புதுச்சேரி பிராந்தியத்தில் தேர்வு மையங்களாக செயல்படும் 69 பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய இரு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.ஜி.எல். தேர்வு ஆகஸ்ட் 21 முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வை சுமூகமாக நடத்தும் வகையில், புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 69 பள்ளிகள் தேர்வு மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் மொத்தம் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

தேர்வுக்கான முன்ஏற்பாடுகள் மற்றும் தேர்வு நடைபெறுவதையொட்டி, சம்பந்தப்பட்ட 69 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை பொருந்தும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. மற்ற பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன