புதுச்சேரி

பாஜக அலுவலகத்தில் எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் பிறந்தநாள் வாழ்த்து: வி.பி. ராமலிங்கம் பொன்னாடை போர்த்து

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைமை அலுவலகத்தில், டி.ஆர். பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சி சுந்தரத்தின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வாழ்த்து நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் துணைத் தலைவர் வி.பி. ராமலிங்கம் அலுவலகத்திற்கு வருகை தந்து, மீனாட்சி சுந்தரத்தை மேடையில் அழைத்து பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருக்கு நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள் கிடைத்து, தொடர்ந்து தொகுதி மக்களுக்கும் புதுச்சேரி மாநிலத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என வாழ்த்தினார்.

அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மலர்க் கொத்துகள், கேக் மற்றும் வாழ்த்துரைகளுடன் மீனாட்சி சுந்தரத்தின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன