தமிழ்நாடு

தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம்: ₹122.51 கோடி ஒதுக்கீடு – விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள்

தமிழ்நாட்டில் மண்வளத்தைப் பாதுகாத்து, சமச்சீர் உரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் 2026-27ஆம் ஆண்டில் ₹122.51 கோடி செலவில் ‘தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம்’ செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 4 லட்சம் விவசாயிகளுக்கு மண்நல அட்டைகள் வழங்கப்படும். மேலும், பசுந்தால் உர விதைகள் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு, ஏக்கருக்கு ₹3,000 உளவு மானியமும் வழங்கப்படும். உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்க 20,000 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹4,000 சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

In brief (English)

The Tamil Nadu government announced the Soil Health Mission with a budget of Rs 122.51 crore to distribute soil cards, promote organic farming, and provide plowing subsidies.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன