பிரதமர் மோடி பிறந்தநாள்: துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் நமச்சிவாயம்!

புதுச்சேரி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரியில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சேவை மற்றும் மக்கள் நலத்திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரியில் உதயா மற்றும் சதீஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் துப்புரவு பணியாளர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், கேக் வெட்டி பிரதமரின் பிறந்தநாளைக் கொண்டாடினார். தொடர்ந்து, நகரைத் தூய்மையாக வைத்திருக்க அர்ப்பணிப்புடன் உழைக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு அத்தியாவசிய நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் சுல்தான்பேட்டை ஜவகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


