தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 6950 வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் அபார முன்னிலை!
புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 6950 வாக்குகள் வித்தியாசத்தில் வலுவான முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறார்.
தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் களத்தில் பிரதான கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் ஆரம்பம் முதலே என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் முன்னிலை வகித்து வருகிறார்.
வாக்கு எண்ணிக்கையின் அடுத்தடுத்த சுற்றுகள் முடிவடைந்து வரும் நிலையில், தற்போது அசோக் ஆனந்த் தனது எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை விட 4,600 வாக்குகள் கூடுதல் வித்தியாசத்தில் பெற்றுள்ளார். இந்த அதிரடி முன்னிலையின் மூலம் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வெற்றி முகம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
முன்னதாக, இன்று காலை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலேயே என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 3,209 வாக்குகள் பெற்று வலுவான முன்னிலையுடன் தனது ஆதிக்கத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சுற்றைத் தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளிலும் தனது முன்னிலை வாக்கு வித்தியாசத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார்.
அசோக் ஆனந்த் 4,600 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதைத் தொடர்ந்து, என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளியிலும், புதுச்சேரி நகரப் பகுதிகளிலும் இனிப்புகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.