தமிழ்நாடு

மேகேதாட்டு திட்டம்: கர்நாடக முதல்வர் சிவகுமாருக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம்

காவிரி நீர் உரிமை தொடர்பாகக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் எடுத்துள்ள நிலைப்பாட்டைக் கண்டித்து, “தமிழக நலன் இவருக்கு முக்கியமில்லை” என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

மேகேதாட்டு அணைத் திட்டத்தை முன்னெடுக்கக் கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சிப்பது, தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிர்நாடியான காவிரி நீர் உரிமை மீதான நேரடித் தாக்குதல் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் உரிமைகள், விவசாயிகளின் வாழ்வாதாரம், காவிரி நீர்ப் பகிர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுகள் ஆகியவற்றைப் புறக்கணித்து, அரசியல் லாபத்திற்காகவே சிவகுமார் மேகேதாட்டு திட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் உரிமை விஷயத்தில் எங்களுக்கு எவ்வித சமரசமும் கிடையாது. சொந்தக் கட்சி அரசு என்பதற்காக மவுனமாக இருக்கப் போவதில்லை; தமிழக நலனுக்கு எதிரான எந்த முடிவையும் தெளிவாக எதிர்ப்போம்” என அவர் கூறினார்.

கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை கூட்டாட்சி நெறிமுறைகளுக்கும் நீர்ப் பகிர்வு ஒப்பந்தங்களுக்கும் முரணானது என்றும், தமிழக மக்களின் நீர் உரிமைக்காக எந்த விலை கொடுத்தும் போராடத் தயார் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *