புதுச்சேரி

குமாரபாளையம் மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி திறப்பு: ஈஷா கிராமோத்ஸவம் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கல்

குமாரபாளையத்தில் அமைக்கப்பட்ட மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் திறப்பு விழா, 18வது “ஈஷா கிராமோத்ஸவம்-2026” சார்பாக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியுடன் இணைந்து நடைபெற்றது.

விழாவில் தொழில்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கலந்து கொண்டு மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமியைத் திறந்து வைத்தார். இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவியரின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த மையம் பயனளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஈஷா கிராமோத்ஸவம்-2026 போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நேரில் சான்றிதழ்களையும் கோப்பைகளையும் வழங்கிப் பாராட்டினார். விளையாட்டு மட்டுமல்ல, ஒழுக்கம், தன்னம்பிக்கை, ஆரோக்கியமான வாழ்க்கை ஆகியவற்றை உருவாக்கும் பயணம் இது என்று அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு கிராமங்களிலிருந்து வந்த சிறுவர்கள், இளைஞர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்கள் நிகழ்ச்சியில் உற்சாகமாகக் கலந்து கொண்டு வெற்றியாளர்களை வாழ்த்தினர். குமாரபாளையம் மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி திறப்பு, மண்ணாடிப்பட்டு பகுதியை விளையாட்டுத் துறையில் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன