அரசியல்

பதவி விலகும் மக்கள் பிரதிநிதிகள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தல்

புதுச்சேரி: அரசியல் சுயலாபங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகள், அதனால் ஏற்படும் இடைத்தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும், தேர்தலுக்கான முழு செலவையும் அவர்களிடமிருந்தே வசூலிக்க சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் லட்சிய ஜனநாயகக் கட்சியின் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் ஏற்படுவதற்கு காரணமான, பதவியை ராஜினாமா செய்த பிரதிநிதிகளே தற்போது மாற்றுக்கட்சிகளில் இணைந்து மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் மக்களாட்சி தத்துவத்தையும், வாக்களித்த பொதுமக்களின் நம்பிக்கையையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

எனவே, சுய அரசியல் காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் உரிய சட்ட விதிகள் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், பொதுமக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் இடைத்தேர்தலின் முழு செலவுத்தொகையையும் பதவியை ராஜினாமா செய்த நபர்களிடமிருந்தே வசூலிக்கும் வகையில் தேர்தல் சட்டங்களில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன