புதுச்சேரி

உழவர்கரையில் புதிய ஆர்த்தோ மருத்துவமனை: முதல்வர் ரங்கசாமி, எம்.எல்.ஏ டாக்டர் நாராயணசாமி திறந்து வைத்தனர்!

புதுச்சேரி: உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பசும்பொன் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘Dr. ராகுல்ஸ் ஆர்த்தோ கேர் – பாண்டி லிம்ப் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கிளினிக்’ (Dr. Ragul’s Ortho Care – Pondy Limb Reconstruction Clinic) மருத்துவமனையின் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, புதிய மருத்துவமனையைத் திறந்து வைத்து சிறப்பித்தனர்.

எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை, கை, கால் மூட்டு சீரமைப்பு உள்ளிட்ட நவீன மருத்துவச் சேவைகளை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையின் திறப்பு விழாவில், மருத்துவர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன