புதுச்சேரி
அரசு கொறடாவாக நியமிக்கப்பட்ட ஏ.கே.டி. ஆறுமுகம்: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து வாழ்த்து

புதுச்சேரி, ஆக. 20: புதுச்சேரி மாநில அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.டி. ஆறுமுகம் அவர்களை, கதிர்காமம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பி. ரமேஷ் மற்றும் ஏம்பலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, புதிய பொறுப்பை ஏற்றுள்ள ஏ.கே.டி. ஆறுமுகத்திற்கு பொன்னாடை போர்த்தி, தங்களது மகிழ்ச்சியையும் மனமார்ந்த வாழ்த்துகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். புதுச்சேரி அரசியலில் இந்த நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சியினர் அவருக்குத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

