சமூக ஊடகத்தில் சலுகை விளம்பரம்: புதுவையில் 2 மதுபான விற்பனை நிலையங்கள் சீல்
புதுச்சேரியில் உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர்கள் தங்கள் கடையின் பெயரையோ, விற்கும் பிராண்டையோ சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தக் கூடாது என்ற விதி இருந்தும், சில கடைகள் அதை மீறி இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கங்களில் கவர்ச்சிகரமான சலுகை விளம்பரங்களை வெளியிட்டு வந்தது கள்ளறைத் துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து கள்ளறைத் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸின் உத்தரவின் பேரில், தாசில்தார் ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில் வருவாய்த் துறை ஆய்வாளர்களும் கள்ளறை காவல் துறையினரும் இணைந்து சோதனையில் இறங்கினர். ஒரு பீர் வாங்கினால் இன்னொரு பீர் இலவசம், மூன்று பேருக்கு உணவு இலவசம் என விளம்பரப்படுத்திய கருவடிக்குப்பம் மதுக்கடை மற்றும் நெல்லித்தோப்பு திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு ரெஸ்ட்ரோ பார் ஆகியவை விதிமீறலில் ஈடுபட்டதாக உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் இரு நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.