புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் உருவம் பொறித்த சிறப்புத் தபால் தலை வெளியீடு: தபால் துறை தொழிற்சங்கத்தினர் நேரில் வாழ்த்து!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ள அசோக் ஆனந்த் அவர்களின் உருவப்படம் பொறித்த சிறப்புத் தபால் தலையை இந்திய அரசின் தபால் துறையின் புதுச்சேரி மண்டலம் வெளியிட்டுள்ளது. தபால் துறை சார்பில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட இந்தச் சிறப்புத் தபால் தலையை, துறை சார்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் அவர்களை நேரில் சந்தித்து வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்திய அரசின் அஞ்சல் துறை சார்பில் பிரமுகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளைக் கவுரவிக்கும் வகையில் சிறப்புத் தபால் தலைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தட்டாஞ்சாவடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றி வரும் அசோக் ஆனந்த் அவர்களைச் சிறப்பிக்கும் விதமாக அவரது புகைப்படம் இடம்பெற்ற சிறப்புத் தபால் தலை புதுச்சேரி அஞ்சல் மண்டலம் வாயிலாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தபால் துறையின் தொழிற்சங்க நிர்வாகிகள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் அவர்களை நேரில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து அவரது உருவம் தாங்கிய சிறப்புத் தபால் தலையினை அவரிடம் முறைப்படி வழங்கி தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வின் போது அஞ்சல் துறை ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சிறப்புத் தபால் தலையைப் பெற்றுக்கொண்ட பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், “மத்திய அரசின் அஞ்சல் துறை புதுச்சேரி மண்டலம் சார்பில் எனது உருவம் தாங்கிய சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டு, அதனைத் தொழிற்சங்க நிர்வாகிகள் என்னிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களின் அன்பிற்கும், மரியாதைக்கும், வாழ்த்துகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் தட்டாஞ்சாவடி தொகுதி மக்களின் நலனுக்காகவும் புதுச்சேரியின் வளர்ச்சிக்காகவும் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்” எனத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன