தமிழ்நாடு

அகஸ்தீஸ்வரத்தில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு: சீர்வரிசை மற்றும் சேலைகளை வழங்கினார் எம்.பி. விஜய் வசந்த்!

அகஸ்தீஸ்வரம்:

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஆண்டுதோறும் கர்ப்பிணிப் பெண்களின் ஊட்டச்சத்து மற்றும் உடல் நலனைப் பேணிக் காக்கும் வகையிலும், அவர்களது மனமகிழ்ச்சியை உறுதிப்படுத்தும் வகையிலும் சமுதாய வளைகாப்பு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அகஸ்தீஸ்வரம் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த 100 கர்ப்பிணிப் பெண்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

இந்த வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கும் வளையல்கள் அணிவித்து, பாரம்பரிய முறைப்படி தட்டுக்களில் பழங்கள், இனிப்புகள் அடங்கிய சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். மேலும், தனது சொந்த சார்பில் கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் தலா ஒரு சேலை வீதம் 100 சேலைகளை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கலந்த ஐந்து வகையான கலவை சாதங்கள் மற்றும் சிறப்பு உணவுகள் பரிமாறப்பட்டன. இந்நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள், சமூக நலத்துறை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு தாய்மார்களை வாழ்த்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன