புதுச்சேரி

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் புதுச்சேரி திமுக நிர்வாகிகள் சந்திப்பு: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை!

புதுச்சேரி: திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை, புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகள் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இச்சந்திப்பில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா, கழக அவைத் தலைவர் எஸ்.பி. சிவகுமார் மற்றும் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் எல். சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது புதுச்சேரி மாநில அரசியல் நிலவரங்கள் மற்றும் தற்போதைய களப்பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக, புதுச்சேரியில் நடைபெறவுள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் மற்றும் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து உதயநிதி ஸ்டாலினுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கான வியூகங்கள், வாக்குச்சாவடி அளவிலான பணிகள் மற்றும் தேர்தல் களத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், புதுச்சேரி மாநில இளைஞர் அணியின் செயல்பாடுகள், களப்பணிகள் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இளைஞர் அணியினரின் தீவிர பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் இச்சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாக புதுச்சேரி திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன