காரைக்கால்

காரைக்கால் மானாம்பேட்டையில் விவசாய பாசனத்திற்கு நீர் திறப்பு: பொதுப்பணித்துறை முக்கிய அறிவிப்பு!

காரைக்கால் மாவட்டம் விழுதியூர் – மானாம்பேட்டை பகுதியில் விவசாய பாசனத் தேவைகளுக்காகத் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகப் புதுச்சேரி பொதுப்பணித்துறையின் நீர்ப்பாசனப் பிரிவு தெற்கு அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாகப் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மானாம்பேட்டை தலப்பு பகுதியில் விவசாய பயன்பாட்டிற்கான நீர்திறப்பு விழா வியாழக்கிழமை காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் நிரவி மற்றும் திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. T.K.S.M. மீனாட்சி சுந்தரம் எம்.எல்.ஏ. அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முறைப்படி தண்ணீரைத் திறந்து வைக்க உள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த நிரவி மற்றும் திருப்பட்டினம் பகுதி விவசாயப் பெருமக்கள் இந்த நீர்திறப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்துகொண்டு, தங்களின் விவசாயத் தேவைகள் மற்றும் பாசனம் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு உதவிப் பொறியாளர், நீர்ப்பாசனப் பிரிவு தெற்கு அலுவலகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன