புதுச்சேரி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற உச்சநீதிமன்றத்தில் வழக்கு: திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் பேட்டி!

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெறுவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக திமுக தேர்தல் பொறுப்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. தெரிவித்தார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து புதுப்பேட்டை பகுதியில் திமுக தேர்தல் பொறுப்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., திமுக துணைப் பொதுச் செயலாளர் க. பொன்முடி, மாநில அமைப்பாளர் இரா. சிவா உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத்ரட்சகன் எம்.பி., “புதுச்சேரியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மாநில அந்தஸ்து மிகவும் அவசியமானது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்திலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தொடர்ந்து குரல் எழுப்புவோம். தட்டாஞ்சாவடி தொகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து 3 நாட்களில் 3 கொலைகள் நடந்துள்ளன. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் மாற்றம் தேவை” என்று தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன