புதுச்சேரியில் உலக சுற்றுலா தின விழா உற்சாகக் கொண்டாட்டம்: போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு!

புதுச்சேரி, செப். 27:
புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ஆம் தேதி உலக சுற்றுலா தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு உலக சுற்றுலா தின விழா தனியார் விடுதியில் வெகு உற்சாகமாக நடைபெற்றது.
உலக சுற்றுலா அமைப்பின் வழிகாட்டுதல்படி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் செப்டம்பர் 26 முதல் 28-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர் சிறப்பு நிகழ்வுகளாக இவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்விழாவில் சுற்றுலாத்துறை செயலர் மணிகண்டன், சுற்றுலாத்துறை இயக்குனர் முரளிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். தொடர்ந்து, சுற்றுலா தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி அவர்கள் பாராட்டினர். இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.



