புதுச்சேரி பாஜக புதிய பொறுப்பாளர் கே. சுரேந்திரனை நேரில் சந்தித்து வரவேற்ற எம்எல்ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு புதுவைக்கு வருகை தந்துள்ள திரு. கே. சுரேந்திரன் அவர்களை, நிரவி–திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நேரில் சந்தித்து அன்புடன் வரவேற்றார்.
புதுச்சேரி அக்கார்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, கட்சியின் புதிய பொறுப்பாளருக்கு எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜகவின் கட்சி அமைப்புப் பணிகள், களப்பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவின் உட்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய பொறுப்பாளரின் தலைமையும் வழிகாட்டுதலும் சிறப்பாக அமைய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சிசுந்தரம் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.