தட்டாஞ்சாவடி தொகுதி: இதயக் கல்லூரி தாளாளரிடம் ஆசி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த்!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பாக்கமுடையான்பேட் பகுதியில் அமைந்துள்ள இதயக் கல்லூரியின் தாளாளர் முனைவர் அருட்சகோதரி பாத்திமா அவர்களை, என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
இந்த சந்திப்பின்போது, கிறிஸ்தவ சமுதாயத்தினர் மற்றும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் ஒட்டுமொத்த நலன்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து முழு அக்கறையுடன் பாடுபடுவேன் என்று வேட்பாளர் அசோக் ஆனந்த் தெரிவித்தார்.
மேலும் தட்டாஞ்சாவடி தொகுதி மக்களின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும், அடிப்படை கட்டமைப்பு சேவைகளையும் முனைப்புடன் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் முன்வைக்கும் அத்தியாவசிய தேவைகள் மற்றும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற முழு வீச்சில் செயல்படுவேன் என்றும் உறுதி அளித்தார்.
