அரசியல்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம்: எஸ்டிபிஐ கட்சி நேரில் ஆதரவு!

சென்னை, செப். 25:
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, ‘நீட் தேர்வு எதிர்ப்பு கூட்டியக்கம் – தமிழ்நாடு’ சார்பில் அகில இந்திய அளவிலான மாபெரும் கையெழுத்து இயக்கம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வு எதிர்ப்பு கூட்டியக்கத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள், எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) அச. உமர் பாரூக் அவர்களை கட்சியின் மாநில தலைமையகத்தில் இன்று (செப். 25) நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, நீட் தேர்வுக்கு எதிரான இந்த அகில இந்திய கையெழுத்து இயக்கத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் ஆதரவை அவர்கள் கோரினர்.

இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் ‘#BANNEET’ பதாகையில் எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் (பொறுப்பு) அச. உமர் பாரூக் கையெழுத்திட்டு தனது முழுமையான ஆதரவைப் பதிவு செய்தார். இந்நிகழ்வின் போது எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் அஸ்கர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன