புதுச்சேரி

வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ ரவிகுமாரை நேரில் சந்தித்து வாழ்த்து: ‘ரைசிங் புதுச்சேரி’ புத்தகத்தை வழங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமாரை, அவரது புதிய அலுவலகத்தில் லட்சிய ஜனநாயகக் கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

வில்லியனூரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குச் சென்ற நிர்வாகிகளை, எம்.எல்.ஏ ரவிகுமார் மிகுந்த அன்போடு வரவேற்றார். இந்தச் சந்திப்பின் போது புதிய அலுவலகத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியின் எதிர்கால தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கிய தனது கனவுப் படைப்பான ‘ரைசிங் புதுச்சேரி’ (Rising Puducherry) புத்தகத்தை அவருக்கு வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வாரியத் தலைவர் பாலமுருகன், லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகப் பொதுச் செயலாளர் ராம்குமார் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன